தெரு விலங்குகளுக்கு உணவு… நீதிமன்றம் பாராட்டு…!!!

தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் செயல்திட்டங்களை உருவாக்கிய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவுக்காக சிரமப்படக் கூடாது என்பதற்காக நிவாரண நிதியை
அறிவித்திருந்தது. அதேபோல் தெரு விலங்குகள் பலவும் உணவின்றி பசியால் தவித்து வருகின்றனர்.

இதற்காக விலங்குகளுக்கு உணவு அளிக்க செயல்திட்டங்களை வழங்குவதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட தெரு விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக தமிழக ஆளுநர் 10 லட்சம், தமிழக அரசு 9.2 லட்சம் ஒதுக்கி இருந்தது. விலங்குகளுக்கு உணவு அளித்ததற்காக தமிழக ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *