“இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் நான் கேன்சல் செய்கிறேன்” உணவுக்கு மதம் எதுவும் கிடையாது – சொமாட்டோ பதிலடி..!!

இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால்  உணவை நான் கேன்சல் செய்கிறேன் என்று ஒருவர் கூறியதற்கு சொமாட்டோ உணவுக்கு மதம் எதுவும்  கிடையாது என்று தெரிவித்துள்ளது 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமாட்டோவில்  உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆனால் ஆர்டர் செய்த உணவை வழங்கும் போது அதனை கேன்சல் செய்துவிட்டார். ஏன் வேண்டாம் என்ற காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Related image

அவர் கூறியதாவது, இந்து அல்லாத ஒருவர் உணவை வழங்குவதால் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை நான் கேன்சல் செய்து விட்டேன். நான் உணவு வழங்குபவரை மாற்ற கூறினேன். ஆனால் அவர்கள் மாற்றவுமில்லை. என் பணத்தையும் திருப்பியும் தரவில்லை.

Image result for zomato

மேலும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி என்னை நீங்கள்  கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு பணம் திரும்ப வேண்டாம். நான் உணவை கேன்சல் செய்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த டுவிட்டுக்கு  பதிலளித்துள்ள சொமாட்டோ உணவுக்கு மதம் எதுவும் கிடையாது உணவே  ஒரு மதம்தான் என தெரிவித்துள்ளது. சொமாட்டோவின் இந்த கருத்துக்கு பலர்  ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்துக்களும், ஒரு சிலர் எதிர் கருத்துக்களையும்  பதிவிட்டு வருகின்றனர்.