தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை எளிய மக்களை மிகவும் கவர்ந்த திட்டமாக தற்போதுவரை பார்க்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இதற்கான வரவேற்பு அதிகம்.
இந்நிலையில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு கிடைக்கும் வகையில் கேண்டீனை நாளை திறக்கவுள்ளார். இதேபோல், குடியரசு தினத்தன்று டெல்லி அசோக் நகரில் மற்றொரு கேண்டீனையும் திறக்கவுள்ளார். மேலும் டெல்லியில் 10 சட்டப்பேரவைத் தொகுதியிலும் திறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.