கொட்டித் தீர்த்த மழை…. உணவு இன்றி தவித்த மக்கள்…. ஊராட்சி மன்ற தலைவரின் அதிரடி நடவடிக்கை….!!!

வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியிலிருந்து அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்பட்டதாலும், தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாகவும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வழியாக செல்லும் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் விச்சூர் ஊராட்சி முழுவதிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்தது.

இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் உணவு, உடை இன்றி தவித்து வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சிமன்ற தலைவர் மக்களுக்கு தேவையான உணவு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கியதோடு படகு மூலம் பொதுமக்கள் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *