“வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” ட்ரோன் மூலம் கண்காணித்த அதிகாரிகள்…. மக்களுக்கு கூறப்பட்ட அறிவுரை….!!!

ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பகுதிகளை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இரு கரைகளையும் தொட்டவாறு நீர் பாய்ந்து ஓடுகிறது. எனவே அதன் கரையோரத்தில் வசித்து வரும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரையோரம் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக உள்ளார்களா அவர்களின் வீடு பாதுகாப்பாக உள்ளதா என அறிந்துகொள்வதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்புகள், சேண்பாக்கம் மற்றும் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வினை தொடர்ந்து கரையோரம் இடியும் நிலையில் உள்ள வீடுகளில் உள்ள உரிமையாளர்களிடம் பாதுகாப்பாக இருக்கும் படி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இதனையடுத்து வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *