பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வட கிழக்கு பருவமழை பெய்ததாலும், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரினாலும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஆற்றின் கரை கரைகளில் உடைப்பு ஏற்பட்டு பழவேற்காடு சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே அப்பகுதி வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆரணி ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் கிராம மக்களின் கோரிக்கையின் படி அடித்து செல்லப்பட்ட சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. தற்போது தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்திற்காக சீரமைக்கப்பட்டுள்ளது.