அட….. அட…. என்னா OFFER…. FLIPCART அதிரடி…..!!

FLIPCART நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு பல அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வருடத்திற்கு ஒரு முறை மூன்று நாட்கள் அதிரடி சலுகை வழங்கி வருவார்கள். அதன்படி அமேசான் தனது கிரேட் இந்தியன் பெஸ்டிவல் முடித்துக் கொண்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை வழங்கி வருகிறது. அதன்படி, மார்ச் 19 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இந்த அதிரடி சலுகைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி வீட்டிற்கு தேவையான பொருட்கள் மொபைல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்திற்கும் அதிரடி சலுகைகள் உண்டு. கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் அவர்களை கவரும் விதமாகவும் இந்த நிறுவனம் பல பொருட்களை செயலியில் வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.