மதுரை விமான நிலையத்திற்கு முத்திராமலினங்க தேவர் பெயரை வைக்க கோரி மர்ம நபர்கள் பறக்கும் விமானத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் .
மதுரையிலுள்ள விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது இந்த கோரிக்கை குறித்து மதுரை மக்கள் பல்வேறு மனுக்களை அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் அளித்ததாகவும் ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் வந்தது இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்

இதனை அடுத்து மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வந்தன தற்போது அது தீவிரமடைந்து சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் விமானத்தில் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் விமானம் எப்பொழுதும் போல் வழக்கமாக இயங்கி வந்தது இந்த விமானமானது பிற்பகல் 12:55 மணி அளவில் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டது.
இதனை அடுத்து அதில் பயணித்த பயணிகளில் சிலர் திடீரென மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என கோஷமிட்டனர் மேலும் கோஷத்தில் மத்திய மாநில அரசுகளிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கோஷமிட்டனர் இதனையடுத்து பயணிகளுக்கு இடையூறு செய்ததாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது….