கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக கடற்கரைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன. கடற்கரைகளுக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போதுதான் கடற்கரைகளுக்கு அனுமதி நிபந்தனைகளுடன் அளிக்கப்பட்டிருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் பெரும்பாலும் கடற்கரை மற்றும் சாலைகளில் கொண்டாடுவது வழக்கம்.
தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு இருப்பதால் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கபட்டு இருப்பதாகவும் தமிழக அரசு கூறியிருக்கிறது.