FLASH NEWS: 1 To 9-ம் வகுப்பு வரை…… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 2023 ஏப்ரல் 20 முதல் 28ம் தேதி வரை இறுதிதேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2022 செப்டம்பர் 23 இல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கும், செப்டம்பர் 26இல் 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்குகிறது.  2022 டிசம்பர் 16 முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் டிசம்பர் 19 இல் 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது.

அரையாண்டு தேர்வுகள் முடிந்து 2023 ஜனவரி 2 பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் 2022-2023 கல்வியாண்டில் 10,11,12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ம் தேதியும்,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும் தொடங்கும் என அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வரும் கல்வியாண்டில் வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *