அரபிக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 மற்றும் 6ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் இன்று முதல் அடுத்த 3 மாதங்களுக்கு மழை அதிகம் பெய்யும். இதன் தாக்கம் கேரளாவை ஒட்டியிருக்கும் தமிழக மாவட்டங்களிலும் காணப்படும்.