Flash News: கொரோனா எதிரொலி… தமிழகம் முழுவதும் மீண்டும் மூடல்?….!!!

தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் மதுபான விடுதிகள் மூட ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் திரையரங்குகள் மற்றும் மதுபான விடுதிகள்மூட ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள், பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா பரவல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தபட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளனர்.