தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதே உகந்தது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கை குறைவாகவுள்ள 150 கல்லூரிகளை நிர்வாகத்தினர் தாங்களே மூடிவிடுவது நல்லது என்றும், மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள மற்றும் தரமற்ற பொறியியல் கல்லூரிகள் நிரந்தரமாக மூட பரிந்துரைக்கப்படும் எனவும்  கூறியுள்ளார்.