கடலூர் மாவட்டம், எம் புதூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் கட்டிட இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து சரியான தகவல் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.