கர்நாடக மாநிலத்தில் உள்ள பீதர் நகரில் ஏடிஎம் எந்திரத்திற்கு பணம் நிரப்ப சென்ற ஊழியர்கள் மீது பட்ட பகலில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஒரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தி பணத்தை கொள்ளை அடித்து சென்றது. இதனால் வங்கி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியை உடைத்து கட்டு கட்டாக பணத்தை எடுத்துச் செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.