FLASH : நாளை (12ஆம் தேதி)… இந்த 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது..

இந்த நிலையில் நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது..

மேலும் கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *