பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வரும் நிலையில் பாலிவுட் பாட்ஷா கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது மும்பை காவல்துறையினருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்காவிடில் ஷாருக்கானை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி இருந்தார். தற்போது அந்த நபரை மொபைல் நம்பரை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அவர் சதீஷ்கரை சேர்ந்த வழக்கறிஞர். அவருடைய பெயர் ஃபைசல் கான். இவர் காவல்துறையினரிடம் போனில் மிரட்டிய போது தான் ஒரு இந்தியன் என்று அடையாளப்படுத்தினார். மேலும் தற்போது இவரை காவல்துறையினர் கைது செய்ததோடு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..