தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டிற்கான 2,512 கோடியை வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. இது வெளிப்படையான மிரட்டல். இந்திய அரசியல் வரலாற்றில் இது போன்ற எந்த ஒரு அரசும் கல்வியை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தியது இல்லை என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் வஞ்சிப்பது பாஜக அரசின் பழக்கம். அதையும் எதிர்கொண்டு தமிழ்நாட்டை வாழ வைப்பது திமுக அரசின் வழக்கம். தமிழ்நாட்டில் பாஜகவினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.