பள்ளிக்கு வராமல் வேறு ஒருவரை வேலைக்கு நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார் . அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி இயக்குனர் அறிவித்துள்ளார். சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பத்தாயிரம் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் குறைந்த ஊதியத்தில் வேறு நபர்களை பணிக்கு அமர்த்தியதாக வெளியாகும் தகவல்களால் இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.