தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து நிலையில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு 70 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படம் மறைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படம் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவியின் செல்போன் எண் என ஒரு நம்பரை காட்டியிருப்பார்கள்.
அது சென்னையை சேர்ந்த ஒரு மாணவரின் செல்போன் எண். படம் ரிலீஸ் ஆன பிறகு அது சாய்பல்லவி என்று செல்போன் என நினைத்து பலரும் அந்த மாணவரை தொடர்பு கொள்கின்றனர். இதனால் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திதற்காக அமரன் திரைப்பட குழு 1.10 கோடியே இழப்பீடாக கொடுக்க வேண்டும் என அந்த மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் ராஜ்கமல் ஃபிலிம் சார்பில் மாணவனின் செல்போன் எண் இடம் பெற்றிருக்கும் காட்சிகளை நீக்கிவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.