FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர்..

இன்றும் கூட கனமழையின் காரணமாக 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. இந்தநிலையில் கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி) திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *