நாட்டில் வருமான வரி துறையால் வழங்கப்படும் ஒரு முக்கிய அடையாள ஆவணம் பான் கார்டு. இது வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் வருமான வரி செலுத்துவதற்கும் ஒரு முக்கிய அடையாள ஆவணமாக திகழ்கிறது. இதேபோன்று போஸ்ட் ஆபீஸில் திட்டங்களில் கணக்கு தொடங்குவதற்கும் பான் கார்டு என்பது ஒரு முக்கிய ஆவணம். ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க முடியும். இந்நிலையில் தற்போது மத்திய அரசாங்கம் பான் கார்டு பயன்படுத்துவதில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது அங்கீகாரம் இல்லாமல் நிறுவனங்கள் பான் கார்டு விவரங்களை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதாவது சில நிறுவனங்கள் தனி நபர்களின் விவரங்களை பெறும் நிலையில் அவற்றை வணிக நோக்கத்திற்காக பகிர்கிறது. குறிப்பாக பான் கார்டு மூலம் வங்கிகளில் சிபில் ஸ்கோரை அறிந்து வாடிக்கையாளர்களை அணுகுகிறார்கள். இது தனி தகவல் விதிமீறலில் வராவிட்டாலும் மின்னனு தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் முன்னோட்டமாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பான் கார்டு விவரங்களை இது போன்ற செயல்களுக்கு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதோடு மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது