சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “அமரன்” திரைப்படத்திற்கு எதிராக, SDPI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறி எதிர்ப்பு  தெரிவித்தனர். போராட்டத்தின் போது, படத்தை தயாரித்த நடிகர் கமலின் உருவ பொம்மையை எரித்து, செருப்பால் அடித்து தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் காஷ்மீர் இஸ்லாமியருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக எஸ்டிபிஐ கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழ்நாட்டில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.