அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்ததால் நீதிபதி விலகியுள்ளார். இதனால் வேறு நீதிபதியை விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.