FlahNews: தமிழகம் முழுவதும்…. 12 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது..

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், நாளை (29.11.21) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை, திமலை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை  மற்றும் நாகை  மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதே போல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை,  ஆகிய 7 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும்  விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பெரம்பலூரில் நாளை 8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை. உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு சூழ்நிலையை பொறுத்து தலைமை ஆசிரியர் முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (29ஆம் தேதி), நாளை மறுநாள் (30ஆம் தேதி) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *