ஒரே நேர்கோட்டில் ஐந்து கிரகங்கள்!.. இன்று வானில் நடக்கும் அதிசய நிகழ்வு..!!!

சமீப காலமாக வானத்தில் பல அரிய நிகழ்வுகள் தோன்றி வருகிறது. இந்த நிலையில் இன்று மார்ச் 28ஆம் தேதி மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மெர்குரி, வீனஸ், மாஸ், ஜூபிடர், யுரேனஸ், மூன் ஆகியவற்றை ஒரே நேர்கோட்டில் காணும் ஒரு அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது. இவை அனைத்தையும் நாம் வெறும் கண்களாலே காண முடியும் என கூறியிருக்கின்றனர் வானியல் நிபுணர்கள்.

இத்தகைய அரிய நிகழ்வினை வெள்ளிக்கிழமை வரை வானில் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் அதை தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்களில் இவை பூமிக்கு அருகிலேயே தொடர்ந்து இருக்கும் எனவும் கூறியுள்ளனர். தற்போது வானத்தில் நடக்க இருக்கும் இந்த அரிய நிகழ்வு எப்போதாவது நிகழக்கூடியதாகவும் அரிதான ஒன்றாகவும் காணப்படுகிறது. இந்த நிகழ்வு மொத்தமாக நேர்கோட்டு பாதையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வானில் தெரியும் என கலிபோர்னியா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் கணக்கீட்டு வாரிய நிபுணரான கேம்ரூன் தெரிவித்துள்ளார்.