“கடலில் நீரோட்டம் சரியில்லை” மீனவர்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்படும் துறைமுகம்….!!!

கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூரில் காற்று வேகமாக வீசியதுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மேலும் 5 அடி முதல் 7 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையை வந்து மோதுவதால் துறைமுகத்திலிருந்து படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் வடகிழக்கு பருவ காற்று பலமாக வீசுவதால் தொடர்ச்சியாக கடல் நீரோட்டத்தில் மாற்றமடைந்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்க வில்லை. ஆகவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லதா காரணத்தினால் பரபரப்புடன் காணப்படும் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *