புதுச்சேரியில் நடுக்கடலில் படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் நடுக்கடலில் படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுவையில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 7,500 உடனடியாக வழங்க வேண்டும், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ரூ. 10,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மத்திய மாநில அரசுகள் அறிவித்த திட்டங்களை முடக்கி மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது குற்றம் சாட்டியுள்ளனர். போராட்டத்தின் போது ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நடுக்கடலில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடற்கரையோரங்களில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *