தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் , தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதோடு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவை பொறுத்தமட்டில், நீடாமங்கலத்தில் 4 சென்டி மீட்டரும், திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 சென்டிமீட்டரும், வல்லம், மதுக்கூரில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவே அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.