நீலகிரியில் கனமழை பெய்யும் ”மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்” வானிலை ஆய்வு மையம் ..!!

நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் ,
Image result for மீனவர்கள் கடலுக்கு செல்ல

அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் .நீலகிரி , கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மழை சார்ந்த பகுதிகளில் இன்று  கன மழைக்கு வாய்ப்புள்ளது.நீலகிரி , கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக  ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாயாபகுதியில்  13 சென்டிமீட்டர் மழையும் ,   கோவை சின்ன கல்லாரில் 10 சென்டி மீட்டர் மழையும் , சோலையார் அவலாஞ்சியில் 8 சென்டி மீட்டர் மழையும் , தேனி மாவட்டம் பெரிய ஆறு , திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.