ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனையா….? ஆய்வு செய்த அதிகாரிகள்…. உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!

மீன்களில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி மார்க்கெட்டில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளனர். எனவே உயர் அதிகாரியின் உத்தரவின்படி அந்தப் பகுதியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் சோதனை செய்துள்ளனர். இதில் மீன் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

அந்த ஆய்வின் இறுதியில் மீன்களில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கொண்ட மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் ரசாயனம் கலந்த மீன்களையும், இறைச்சிகளையும் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *