“அம்மாடியோவ்!”…. வரலாறு காணாத சாதனை…. சிங்கப்பெண்ணாக வலம் வரும் இந்தியர்….!!!!

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத் சண்டி என்ற பெண் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

பிரீத் சண்டி கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இதற்கான பயணத்தை தொடங்கினார். அண்டார்டிகா முழுக்க பனிச்சறுக்கு செய்தவாறு 40 தினங்களில் சுமார் 1126 கிலோமீட்டர் கடந்து சென்று சாதனை படைத்திருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, பூமியிலேயே அதிக குளிரான கண்டம் அண்டார்டிகா தான்.

யாராலும் அங்கு நிரந்தரமாக இருக்க முடியாது. அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட சமயத்தில், அங்கு இருக்கும் நிலை குறித்து எனக்கு சரியாக தெரியாது. இரண்டரை ஆண்டுகள் பிரெஞ்சு ஆல்ப்  மலையிலும், ஐஸ்லாந்தில் இருக்கும் மலைகளிலும் பயிற்சி மேற்கொண்டேன்.

அண்டார்டிகா பயண சமயத்தில், உணவு, உடை மற்றும் மருத்துவ சாதனங்கள் உட்பட சுமார் 90 கிலோ எடையுடைய பையை முதுகில் சுமந்தேன். இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்தவுடன் பெரிய நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நபர், தன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தால், மிகப் பெரிய சாதனைகளைப் படைக்கலாம் என்ற உத்வேகத்தை அனைவருக்கும் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *