நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி ஊராட்சியில் நேற்று முதன்முதலாக மகளிர் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே மாவட்ட அளவில் முன்மாதிரி கிராமமாக விளங்கி வரும் அந்த ஊராட்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் கூட்டத்திற்கு ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் சுசிலா தலைமை தாங்கி பேசியுள்ளார்.
மேலும் கூட்டத்தில் கடந்த சில நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை காவலர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி பணிக்கு திரும்ப ஏற்பாடு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் காமராஜர், எருமப்பட்டி திட்டமகளீர் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் மகளிர் மேம்பாடு குறித்தும் அரசு திட்டங்கள் வேலை வாய்ப்புகள் கடனுதவி பயிற்சிகள் மற்றும் பல்வேறு வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசி உள்ளார்.