விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி.!!

அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்று முன்தினம் மாலை திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.  மக்கள் பலர் உணவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டான். இதனால் அச்சமடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும்  7 பேர் பலத்த காயமடைந்தனர்.

Image result for #Baltimore #GunFire

துப்பாக்கிச்சூடு தாக்குதல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து  சென்றனர். ஆனால் போலீசார் வருவதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம  நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார், துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 7 நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.