வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 10,802 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கன் வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. மும்முனை போட்டியாக நடைபெற்ற இந்த தேர்தலில் அ.தி.மு.க கட்சியின் சார்பில் ஏ.சி.சண்முகமும் , தி.மு.க கட்சியின் சார்பில் கதிர் ஆனந்த்_தும் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி_யும் வேட்பாளராக களம் கண்டனர். இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பளர்கள் அனைவரையும் சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர்.பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்க முதலே அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்ற்ற நிலையில் பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் முன்னிலை பெற்றார். இதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகமே முன்னிலை பெற்றார். 15,000 வாக்குகள் வரை பின்னுக்கு சென்ற கதிர் ஆனந்த் தோல்வி உறுதி ஆகி விட்டது என்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தை தொடங்கினர். பின்னர் கடும் போட்டியாக மாறி மாறி வாக்கு வித்தியாசம் குறைந்த நிலையில் தீடிரென திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார்.
15,000 வாக்குகள் பின்னுக்கு இருந்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்கு வித்தியாசத்தை சிறிது சிறிதாக குறைத்து பின்னர் 16,000 வாக்குகள் வரை அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை விட முன்னிலை பெற்றார். கடுமையான போட்டியாக இருந்து வரும் தேர்தல் முடிவில் மாறி மாறி வாக்கு வித்தியாசம் இருந்து வருகின்றது . தற்போதைய நிலவப்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 3,93,242 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,04,044 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 22,003 வாக்குகளும் பெற்றுள்ளனர்.அதிமுகவின் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட கதிர் ஆனந்த் 10,802 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.