வீட்டுக்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தட்டான்குளம் பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு வளாகத்திற்குள் சாரைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கருப்பசாமியின் குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1/2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது.