கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரியமணல் கிராமத்தில் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் விழுந்த நாய் மேலே வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிளாஸ்டிக் கூடை மூலம் நாயை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் சின்னவளையம் கிராமத்தில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் பசுமாடு விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது வீரர்கள் கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர். நாய் மற்றும் பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.