அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1000 காலணிகள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு காலணிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும், பொதுமக்களும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல்வேறு கட்ட முயற்சிக்கு பிறகு அறையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 1000 காலணிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த பள்ளிக்கல்வி துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.