கிணற்றில் விழுந்த காட்டெருமை…. 10 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை எதிர்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் 40 அடி வரை தோண்டி 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமையை பத்திரமாக மீட்டனர். பின்னர் காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.