தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்…. எரிந்து நாசமான கோழி பண்ணை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெடுங்கல் பகுதியில் ராணுவ வீரரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராமலையில் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக இந்த கோழி பண்ணை செயல்படவில்லை. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் யாரோ அந்த பண்ணைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சிவகுமார் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply