திருப்பூரில் பனியன் அட்டை கிடங்கில் தீ விபத்து….!!

திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் லட்சுமி நகர் பகுதியில் பழைய பேப்பர் கிடங்கு ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அட்டை பெட்டிகள், நூல் கோன்கள் மீது மளமளவென பரவிய தீ குடோனில் உள்ள பனியன் அட்டை பொருட்களிலும்  முழுவதும் எரியத்தொடங்கியது.

Image result for தீ விபத்துஉடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் உள்ள பனியன் வேஸ்ட், அட்டைகள், கேன்கள் அனைத்தும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகின. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.