சாதாரண புற்கள் தானேனு நினைச்சோம்… மளமளவென பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

காய்ந்த புற்களில் வெயிலின் தாக்கம் காரணமாக தீப்பிடித்து குடியிருப்பு பகுதி வரை தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் மேய்ச்சல் நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தில் இருக்கும் புற்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்ந்து சருகாக கிடந்துள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென புற்கள் தீப்பற்றி அருகிலிருந்த குடியிருப்பு பகுதி வரை பரவி விட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து விட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன், குருசாமி, ராஜன், நாச்சிமுத்து போன்றோரின் வீடுகள் தீயில் நாசமாகிவிட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.