சூரத்தில் தீ விபத்து “20_க்கும் மேற்பட்டோர் பலி” நெஞ்சை பதைக்க செய்யும் வீடியோ….!!

சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கே இருந்த பயிற்சி பள்ளி மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும் , 20 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநித்தில் உள்ள சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள  வணிக வளாகத்தின் மாடியில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் மின்சார கோளாறு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 3_ஆவது மற்றும் 4_ஆவது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் மீட்கப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மாடியில் இயங்கி வந்த டியூஷன் சென்டரில் 14 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் இன்னும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தீயை கட்டுப்படுத்த 18 வாகனங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த துயர விபயத்தில் 2க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்கும் காட்சி நெஞ்சை பாதை பதைக்க வைக்கிறது.இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.