சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. மின்னல் தாக்கி தீப்பிடித்த தென்னை மரங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் தாணிப்பாறை விலக்கிலிருந்து மந்தி தோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியது. இதனால் இரண்டு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.