“எல்லாம் நாசமா போச்சு” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!

இறைச்சி கடை தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கோழி, இறைச்சி கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் வியாபாரம் முடிந்ததும் இரவு கடையை மூடிவிட்டு ரவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதிகாலை 3 மணியளவில் திடீரென கடையின் மேற்கோரை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் கடையிலிருந்த கூண்டு, கோழிகளை சுத்தப்படுத்தும் எந்திரம் உட்பட பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *