லாரியை பின்நோக்கி இயக்கிய ஓட்டுநர்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!!

லாரி தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி நல்லூர் கிராமத்தில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து சரக்கு ஏற்றுவதற்காக மினி கன்டெய்னர் லாரியில் சென்றுள்ளார். அப்போது வசந்தகுமார் கண்டெய்னர் லாரியை பின்பக்கமாக இயக்கியுள்ளார். அப்போது அருகிலிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் உள்ள கம்பியில் லாரி உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது.

அதில் லாரின் முன்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எனவே வசந்தகுமார் லாரியிலிருந்து இறங்கி தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. இதனையடுத்து அவரது உடல் தீப்பிடித்து முழுவதும் எரிந்து விட்டது. இது குறித்து தகவலறிந்த மறைமலை நகர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். அதற்குள் வசந்தகுமார் முழுவதும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *