எப்படி நடந்துச்சு…. ரூ 1 1/2 லட்சம் பொருட்கள் நாசம்…. கரூரில் பரபரப்பு….!!!

வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நடையனூர் பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அழகாபுரி பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகின்றார். இதில் வெல்லம் தயாரிப்பதற்கான கரும்பு சக்கை போர் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தன. மேலும் வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் ஆகியவை தயாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் இரவு நேரத்தில் கரும்பு சக்கை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அணைக்க முடியவில்லை. எனவே அருகிலுள்ள வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ 1 1/2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *