மளமளவென பரவிய தீ…. வீரர்களின் தீவிர முயற்சி…. கரூரில் பரபரப்பு….!!!

கீற்றுக்கொட்டகை தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கீற்றுக் கொட்டகை போட்டு இருந்தார். இந்நிலையில் கீற்றுக் கொட்டகையின் அருகிலிருந்த சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த கீற்றுக் கொட்டகை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.

இருப்பினும் முடியவில்லை. எனவே அருகில் உள்ள வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரர்கள் கீற்றுக் கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ 50 ஆயிரம் மதிப்பிலான கொட்டகை தீயில் எரிந்து நாசமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *