இது எப்படி நடந்திருக்கும்… எரிந்து சாம்பலான குடிசை… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் 5 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் எரிந்து நாசமாகிவிட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆம் தேதியன்று குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் கிராமத்தில் நடந்த துர்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் திடீரென இவரது குடிசை வீட்டு மளமளவென பற்றி எரய  ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் குடிசை வீட்டிற்கு அருகில் இருந்த வைக்கோல் போறும் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் தீ விபத்தில் ஆறுமுகத்தின் வீட்டிலிருந்த 5 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி புத்தகம் போன்ற அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *