லாரியில் ஏற்றி சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் பகுதியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் லாரி சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த மின்சார வயரில் வைக்கோல் உரசியுள்ளது. இதனால் லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் லாரி மற்றும் அதில் இருந்த வைகோல்கள் முழுமையாக எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த மதுராந்தகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.